முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஜியோ சினிமாவின் அசத்தல் பரிசுப் போட்டி- கார்களை வென்றவர்கள் பட்டியல் வெளியீடு…

IPL 2023 : ஜியோ சினிமாவின் அசத்தல் பரிசுப் போட்டி- கார்களை வென்றவர்கள் பட்டியல் வெளியீடு…

ஜியோ சினிமா நடத்தும் ஐபிஎல் ரசிகர்களுக்கான போட்டி.

ஜியோ சினிமா நடத்தும் ஐபிஎல் ரசிகர்களுக்கான போட்டி.

ஜீத்தோ தன் தனா தன் போட்டியில் சரியான பதிலை அளிக்கும் ரசிகர்களுக்கு காரை பரிசாக வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஜியோ சினிமா நடத்திய போட்டியில் கார்களை வென்றுள்ள 9 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் உத்தரகாண்ட், கோவா, மிசோரம், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் ஜீத்தோ தன் தனா தன் என்ற போட்டியை ஜியோ சினிமா நடத்தி வருகிறது. கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த போட்டியில் இதுவரை 55 பேர் கார்களை வென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட போட்டியில் கார்களை வென்றவர்களின் பட்டியலை ஜியோ சினிமா வெளியிட்டுள்ளது.

மே 11 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் உத்தரகாண்டை சேர்ந்த ராம்குலாப் காரை பரிசாக வென்றுள்ளார். 12 ஆம் தேதி நடந்த போட்டியின்போது லட்சக்கணக்கானோருக்கு மத்தியில் 23 வயதாகும் தரம் தாடக் காரை பெற்றுள்ளார்.

மே 13 ஆம் தேதி நடந்த போட்டியில் சென்னையை சேர்ந்த ஆர். தினேஷ் குமார் மற்றும் கோவவை சேர்ந்த கஜனன் ஷிரோட்கர் ஆகியோர் காரை பரிசாக வென்றுள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மேட்ச்சின் போது நடத்தப்பட்ட ஜீத்தோ தன் தனா தன் போட்டியில் காரை வென்றுள்ளார் தினேஷ் குமார்.

டெல்லி – பஞ்சாப் போட்டியின்போது கஜனன் ஷிரோட்கருக்கு கார் கிடைத்துள்ளது. இது அவரது பிறந்த நாளை மேலும் கொண்டாட்டப்படுத்தி உள்ளது. மே 14 ஆம் தேதி நடந்த போட்டியில் டேராடூனை சேர்ந்த விகாஸ் தேவரானி சென்னை – கொல்கத்தா மேட்ச்சின்போது காரை பெற்றார்.

மே 15 ஆம்தேதி ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த மேட்ச்சின்போது, குஜராத்தை சேர்ந்த விஷ்வாஸ் கவாடேவும், மே 16 ஆம் தேதி நடந்த லக்னோ – மும்பை இடையிலான மேட்ச்சின்போது விரேந்தர் குமாரும் காரை பெற்றனர்.

மே 17 ஆம் தேதி டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. அன்றைய தினம் நடத்தப்பட்ட ஜீத்தோ தன் தனா தன் கான்டெஸ்டில் ஷில்லாங்கை சேர்ந்த பிளெமிங் கிம்டெய்ட் காரை பரிசாக பெற்றார். டாடா ஐபிஎல் ரசிகர்களின் அனுபவத்தை மேலும் சுவாரசியப்படுத்தும் வகையில் ஜீத்தோ தன் தனா தன் போட்டியை ஜியோ சினிமா நடத்தி வருகிறது. இதில் ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், வயர்லெஸ் இயர்ஃபோன் உள்ளிட்டவை பரிசாக அளிக்கப்படுகின்றன.

இதற்காக ரசிகர்கள் தங்களது ஃபோனை போர்ட்ரெய்ட் மோடில் வைத்திருக்க வேண்டும். அப்போது சாட் பாக்ஸில் கேட்கப்படும் கேள்விகளுக்கு 4 ஆப்ஷனுடன் விடைகள் அளிக்கப்பட்டிருக்கும். சரியான பதிலை அளிக்கும் ரசிகர்களுக்கு காரை பரிசாக வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது.

top videos

    JioCinema (iOS & Android)ஐப் பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்க்கலாம். சமீபத்திய புதுப்பிப்புகள், செய்திகள், மதிப்பெண்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ரசிகர்கள் Facebook, Instagram, Twitter மற்றும் YouTube இல் Sports18 ஐப் பின்தொடரலாம் மற்றும் Facebook, Instagram, Twitter மற்றும் YouTube இல் JioCinema ஐப் பின்தொடரலாம்.

    First published:

    Tags: IPL, IPL 2023