முகப்பு /செய்தி /விளையாட்டு / சிஎஸ்கே Vs குஜராத் போட்டியில் புதிய சாதனை படைத்த ஜியோ சினிமா..!

சிஎஸ்கே Vs குஜராத் போட்டியில் புதிய சாதனை படைத்த ஜியோ சினிமா..!

ஜியோ சினிமா புதிய சாதனை

ஜியோ சினிமா புதிய சாதனை

நேற்றைய சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் இறுதி கட்டத்தை சுமார் 2.5 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர்.

  • Last Updated :
  • New Delhi, India

2023 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்து, நேற்று முதல் குவாலிபையர் போட்டி நடைபெற்றது. லீக் சுற்று முடிவில், புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த குஜராத் - சென்னை அணிகள், முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மோதின. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்,  சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை குவித்தது. 173 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த குஜராத் அணி சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

குறிப்பாக, சிறப்பாக பந்து வீசிய ரவிந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து தசுன் ஷனகா மற்றும் டேவிட் மில்லர் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த குஜராத் அணி 157 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் சென்னை அணியை போலவே ஜியோ சினிமாவும் புதிய சாதனையை படைத்துள்ளது. 2023 ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் பார்ட்னரான ஜியோ சினிமா, அனைத்து போட்டிகளையும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது. பொதுவாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே போட்டிக்கு கூடுதல் மவுசு இருக்கும். அதிகளவிலான பார்வையாளர்கள் சாதனை என்பது சிஎஸ்கே போட்டிகளில் தான் நிகழ்ந்துள்ளது.

அவ்வாறு நேற்றைய போட்டியிலும் ஜியோ சினிமா பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்துள்ளது. நேற்றைய போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் இறுதி கட்டத்தை சுமார் 2.5 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். இது புதிய உலக சாதனையாகும். இதற்கு முன்னர், கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையேயான போட்டியை  2.4 பேர் ஒரே நேரத்தில் பார்த்ததே சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க: IPL 2023 : ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த 10 பேட்ஸ்மேன்கள்… ஆரஞ்ச் கேப் வெல்லப்போவது யார்?

top videos

    நேற்றைய சாதனையை பல ரசிகர்களும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகின்றனர். இவ்வாறு ஜியோ சினிமா ஒவ்வொரு போட்டிகளிலும் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த தொடரில் இதுவரை மட்டும் சுமார் 1,300 கோடி வீடியோ வியூஸ் ஜியோ சினிமாவில் பதிவாகியுள்ளது. இதுவும் உலக சாதனையாகும். மேலும், இதுவரை நடைபெற்ற எந்த நிகழ்வுகளுக்கும் இல்லாத அளவிற்கு அதிக அளவிலான விளம்பரதாரர்கள் மற்றும் ஸ்பான்சர்களை ஜியோ சினிமா இந்தாண்டு ஒப்பந்தம் செய்துள்ளது.

    First published:

    Tags: CSK, Gujarat Titans, IPL 2023, Jio