முகப்பு /செய்தி /விளையாட்டு / விராட் கோலியின் கையைப் பிடித்து முறுக்கினாரா ஆப்கன் வீரர்? வைரலாகும் மோதல் வீடியோ

விராட் கோலியின் கையைப் பிடித்து முறுக்கினாரா ஆப்கன் வீரர்? வைரலாகும் மோதல் வீடியோ

விராட் கோலி - நவீன் உல் ஹக் இடையே மோதல் ஏற்பட்டபோது

விராட் கோலி - நவீன் உல் ஹக் இடையே மோதல் ஏற்பட்டபோது

லக்னோ அணியின் பேட்டிங்கின்போது 17 ஆவது ஓவரில்தான் இந்த மோதலுக்கான தொடக்கம் ஏற்பட்டது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணியின் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி இடையே மோதல் ஏற்பட்டபோது, கோலியின் கையை பிடித்து நவீன் முறுக்கியது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. நேற்று நடந்த மேட்ச் மற்றும் ரிசல்ட்டை விட விராட் கோலி – கவுதம் காம்பீர், விராட் கோலி – நவீன் உல் ஹக் ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் தான் இன்று நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

லக்னோ அணியின் பேட்டிங்கின்போது 17 ஆவது ஓவரில்தான் இந்த மோதலுக்கான தொடக்கம் ஏற்பட்டது. அந்த ஓவரின் கடைசி பந்தை பெங்களூரு அணியின் சிராஜ் வீச அதை நவீன் எதிர்கொண்டபோது நடுவர் நோ பால் வழங்கினார். இதை எதிர்த்து பெங்களூரு அணி அப்பீல் செய்த பின்னரும் நோ பால் அளிக்கப்பட்டது. அப்போது, நவீன் மற்றும் கோலி இடையே மோதல் ஏற்பட்டு ஷூவில் இருந்த தூசியை வீசி நவீனைப் பார்த்து கோலி சில வார்த்தைகளைக் கூறினார்.

ஆட்டம் முடிந்த பின்னர் நவீனிடம் விராட் கோலி ஏதோ சில வார்த்தைகளை சொல்ல, நவீன் கோலியின் கையை பிடித்து முறுக்குவது போன்று செய்கிறார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. ஏற்கனவே தேவையில்லாத வம்புகளை நவீன் விலைக்கு வாங்கியதாக கூறியுள்ள கோலியின் ரசிகர்கள், அதுகுறித்த வீடியோவை பதிவிட்டுள்ளனர்.

ஆட்டத்தை விடவும், ஆட்டம் முடிந்த பின்னர் ஏற்பட்ட இந்த மோதல்தான் விளையாட்டு உலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

First published:

Tags: IPL, IPL 2023