லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. லக்னோவில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30க்கு தொடங்கும் 2 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதற்கிடையே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் அடைந்தார். இதனால் அவதிப்பட்ட அவர், ஓபனிங் பேட்டிங் செய்வதை தவிர்த்து கடைசி விக்கெட்டிற்கு களத்தில் இறங்கினார். இருப்பினும் அவரால் ரன் ஓட முடியவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 126 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.
மிக குறைவான ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் லக்னோ அணி தோல்வியடைந்ததற்கு கேப்டன் கே.எல்.ராகுலும் முக்கிய காரணமாக இருந்தார். நாளை வலுவான சென்னை அணிக்கு எதிராக போட்டி நடைபெறவுள்ள நிலையில், கே.எல்.ராகுல் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், க்ருணல் பாண்ட்யா உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் லக்னோ அணி சென்னைக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. பாயின்ட்ஸ் டேபிளை பொருத்தளவில் லக்னோ அணி 9 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 3 ஆவது இடத்திலும், இதே கணக்கீட்டின் அடிப்படையில் சற்று குறைவான நெட் ரன் ரேட்டைபெற்று சென்னை அணி 4 ஆவது இடத்திலும் உள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2 ஆவது இடத்திற்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.