முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL Qualifier 2 : மழையால் போட்டி ரத்தானால் ஃபைனலுக்கு எந்த அணி செல்லும்?

IPL Qualifier 2 : மழையால் போட்டி ரத்தானால் ஃபைனலுக்கு எந்த அணி செல்லும்?

ஹர்திக் பாண்ட்யா - ரோஹித் சர்மா

ஹர்திக் பாண்ட்யா - ரோஹித் சர்மா

மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஆன நிலையில், போட்டியின் இடையே மழை குறுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குவாலிபையர் 2 போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்போது மழை குறுக்கிட்டு இடையூறு செய்து வரும் நிலையில் போட்டி ரத்தானால் எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

கடந்த செவ்வாயன்று நடைபெற்ற குவாலிபையர் 1 போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதியதில், சென்னை அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அடுத்த நாள் நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி குவாலிபையர் 2 போட்டியில் விளையாட மும்பை அணி தகுதி பெற்றது. இந்நிலையில் அகமதாபாத் நரேந்திரே மோடி மைதானத்தில் குவாலிபையர் 2 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் மழை காரணமாக டாஸ்  போடுவதில் தாமதம் ஆன நிலையில், போட்டியின் இடையே மழை குறுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை போட்டியை குறுக்கீடு செய்தால் பின்வரும் விதிகள் பின்பற்றப்படலாம்…

  • தேவைப்பட்டால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படலாம்.
  • இரவு 9.40 மணி வரையில் 20 ஓவர் போட்டிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்குள்ளாக மழை நிற்க வேண்டும். அதன் பின்னரும் மழை தொடர்ந்து இரவு 11.56 வரை மழை நீடித்தால் இரு ஓவரும் தலா 5 ஓவர் போட்டியில் விளையாடும்.
  • இந்த 2 வாய்ப்புகளுக்கும் சாத்தியம் இல்லாவிட்டால் சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும். இந்த சூப்பர் ஓவர் நள்ளிரவு 12.50-க்கு தொடங்கலாம்.
  • இந்த விதிகள் அனைத்திற்கும் வாய்ப்பு அளிக்காமல் மழை நீடித்தால் லீக் போட்டியில் அதிக புள்ளிகளை பெற்ற அணி என்ற அடிப்படையில், குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
top videos

    First published:

    Tags: IPL, IPL 2023