முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : அறிமுக போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்… ஐதராபாத்தின் விவ்ரந்த் சர்மா சாதனை

IPL 2023 : அறிமுக போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்… ஐதராபாத்தின் விவ்ரந்த் சர்மா சாதனை

விவ்ரந்த் சர்மா

விவ்ரந்த் சர்மா

விவ்ரந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தி சிறப்பான தொடக்கத்தை அணிக்கு கொடுத்தனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான போட்டியில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விவ்ரந்த் சர்மா. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை அவர் ஏற்படுத்தியுள்ளார். மும்பை வான்கிடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. ஐபிஎல் தொடரில் 69 ஆவது ஆட்டமாக நடைபெறும் இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். இல்லாவிட்டால் தொடரை விட்டு வெளியேறி விடும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஐதராபாத் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில், இன்றைய போட்டியில் மும்பைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வருகிறது. மதியம் 3.30 க்கு தொடங்கிய இந்த போட்டியின்போது ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக விவ்ரந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களத்தில் இறங்கினர். ஜேசன் பெரன்டஃப், கேமரூன் கிரீன், கிறிஸ் ஜோர்டன் என மும்பை அணியின் பவுலிங் வரிசை பலமாக இருந்தபோதிலும், ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக விவ்ரந்த் சர்மா இந்த போட்டியின் மூலமாகத்தான் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆகிறார்.

இதையும் படிங்க - ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்ட சி.எஸ்.கே. வீரர் இங்கிலாந்திற்கு புறப்பட்டார்…

top videos

    நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விவ்ரந்த் சர்மா 2 சிக்சர் மற்றும் 9 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். விவ்ரந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தி சிறப்பான தொடக்கத்தை அணிக்கு கொடுத்தனர். இந்நிலையில் அறிமுகமான போட்டியில் அதிக ரன்களை குவித்தவர் என்ற சாதனையை விவ்ரந்த் சர்மா ஏற்படுத்தியிருக்கிறார். இந்த போட்டியில் மும்பை அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால் ஆகியோரும், ஐதராபாத் அணியில் மயங்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், ஹாரி புரூக், நிதிஷ் ரெட்டி, கிளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் ஆகியோரும் விளையாடுகின்றனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023