ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ மைதானத்தில் நேற்று பெரிய ட்ராமா நடந்தது. கோலியும் - கம்பீரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டினர். இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு கேப்டனாக வந்தவர் கோலி. தோனி கேப்டன் கூல் என்றால் கோலி அதுக்கு நேரெதிர். களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார் கோலி. வம்புக்கு வம்பு சண்டைக்கு சண்டை இதுதான் கோலி பாலிசி. ஸ்லெட்ஜிங் மன்னர்களான ஆஸ்திரேலிய வீரர்களையே ஒரு கைபார்த்திவிடுவார் நம்ம ‘கிங்’கோலி. சேட்டை புடிச்ச பையன் சார் இந்த கோலி என பலரும் அவரை சீண்ட கொஞ்சம் யோசிப்பார்கள்.
இந்நிலையில் நேற்று லக்னோவுக்கு எதிரான போட்டியில் பீஸ்ட் மோடுக்கு போய்விட்டார் கோலி. கம்பீர் - கோலி நேற்று ஒருவரை ஒருவர் அடித்துக்கொல்லவில்லை அந்தளவுக்கு மைதானத்தில் மோதல் நடந்தது. லக்னோ சம்பவத்துக்கு முன்னாடி கொஞ்சம் சின்னசாமி ஸ்டேடியம் வரை போய் வருவோம். ஏப்ரல் 10-ம் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி - லக்னோ அணிகள் மோதியது. சின்னசாமி ஸ்டேடியம் ஆர்.சி.பியின் ஹோம் க்ரவுண்ட். கேஜிஎஃப் வீரர்களான கோலி, மேக்ஸ்வெல், டுபிளசிஸ் பேட்டிங்கில் மிரட்ட 212 ரன் எடுத்து மிரட்டியது ஆர்சிபி.
லக்னோவுக்கு ஆரம்பத்தில் அடி விழுந்தாலும் நிக்கோலஸ் பூரன் - ஸ்டோனிஸ் மிரட்ட மேட்ச் லக்னோ பக்கம் திரும்பியது. கடைசி பந்தில் நம்ம டிகே ரன் அவுட் மிஸ் செய்ய த்ரில் வெற்றி பெற்றது லக்னோ. மேட்ச்சில் லக்னோ ஜெயிச்சாலும் ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்சிபி.. ஆர்சிபி என கத்த கடுப்பானார் லக்னோ மெண்டார் கவுதம் கம்பீர். சின்னசாமி க்ரவுண்டுக்குள் வந்த கம்பீர் கேலரியில் இருந்த ரசிகர்களை நோக்கி சைலென்ஸ் என விரலை வாயில் வைத்து மிரட்ட காண்டானார்கள் ரசிகர்கள்.
இதெல்லாம் நம்ம கோலி கண் முன்னாடி வந்துப்போகுமா இல்லையா. நேற்று போட்டியில் கோலி, டூபிளசிஸ் தவிர மற்ற வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த 126 என்ற சொற்ப ரன்களுக்கு சுருண்டது ஆர்.சி.பி. செகண்ட் ஆஃப் களத்துக்கு வந்ததில் இருந்தே கோலி பீஸ்ட் மோடில் இருந்தார். விராட் கோலிக்கு ஏற்றவாறு ஆர்.சி.பி பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். ஒவ்வொரு விக்கெட்டுக்கும் கோலி சைலென்ஸ் என சொல்லி கம்பீரின் செய்கையை நினைவூட்டினார்.
இதையும் படிங்க: IPL 2023 : லக்னோவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆர்.சி.பி
9-வது விக்கெட் இணைந்த நவீன் உல் ஹக் - அமித் மிஸ்ரா ஜோடி நிதானமாக ரன் குவிக்க. சிராஜ் கொஞ்சம் சீண்டி பார்க்க.. கோலி சீறிப்பாய ஆரம்பித்துவிட்டார். நவீன் உல் ஹக்கை வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். இருவருக்கும் களத்திலே முட்டிக்கொண்டது. கோலி ஷூ-காட்டி வம்பிழுத்தார். இருவரும் பார்வையிலே சீண்டிக்கொண்டனர். அமித் மிஸ்ரா கோலியிடன் ஏன் இவ்வளவு ஆக்ரோஷம் எனக் கேட்க மீண்டும் முட்டிக்கொண்டது. அப்புறம் நடுவர்கள் வந்து பஞ்சாயத்து செய்து அனுப்பி வைத்தனர்.
போட்டி முடிந்தும் மோதல்கள் முடிந்த பாடில்லை. கைகுலுக்கும் போது நவீன் உல் ஹக்கிடம் மீண்டும் ஆக்ரோஷமாக பேச அவரும் வாக்குவாதம் செய்தார். மேக்ஸ்வெல் வந்து நவீனை சமாதானப்படுத்தினார். அடுத்து தான் முக்கிய சம்பவமே கோலிக்கு கவுதம் கம்பீருக்கும் முட்டிக்கொண்டது. இருவரும் ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டனர்.
#ViratKohli This is the moment when whole fight started between Virat Kohli and LSG Gautam Gambhir
Amit Mishra
Naveen ul haq#LSGvsRCB pic.twitter.com/hkId1J33vY
— Mehulsinh Vaghela (@LoneWarrior1109) May 1, 2023
கைல் மேயர்ஸ் - கோலி ஜாலியா பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த கம்பீர் மேயர்ஸை கையோடு கூட்டிச்சென்றார். இதனால் கடுப்பான கோலி வார்த்தைகளை வீசி கம்பீரை வம்புக்கு இழுத்தார். சும்மா ஆடும் கம்பீருக்கு கோலி சலங்கை கட்ட வேட்டியை மடித்துக்கொண்டு வந்தார். கம்பீர் - விராட் கோலி இருவரும் மோதிக்கொள்வது போல் ஆக்ரோஷமாக நேருக்கு நேர் நிற்க இரு அணி வீரர்களும், நிர்வாகிகளும் சூழ்ந்தனர். இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். போட்டி முடிந்தும் விராட் கோலிதான் ஆக்ரோஷமாக இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gautam Gambhir, IPL 2023, Tamil News, Virat Kohli