ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆல்ரவுண்டராக ஜொலித்து வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆட்டக்காரராக இடம்பெற்று வந்த அவர், கடந்த சீசனில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக பொறுப்பில் இருந்து, அணி சாம்பியன் பட்டம் பெற முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், 2 ஆயிரம் ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகளை எடுத்த 6 ஆவது வீரர் என்ற புதிய சாதனையை ஐபிஎல் தொடரில் பாண்ட்யா ஏற்படுத்தியுள்ளார்.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது 19 பந்துகளில் பாண்ட்யா 28 ரன்களை எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 147.37. இதேபோன்று 4 ஓவர்களை வீசிய அவர் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 2015 ஆம் ஆண்டில் அறிமுகமாகி இதுவரை 111 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்ட்யா மொத்தம் 2,012 ரன்களை எடுத்திருக்கிறார். சராசரி 29.16 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 146.33. இவற்றில் 8 அரைச் சதங்கள் அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 91 ரன்கள்.
ஒட்டுமொத்தமாக 51 விக்கெட்டுகளை பாண்ட்யா எடுத்திருக்கிறார். இருப்பினும் சராசரி 31.47 ஆகவும், எகானமி ரேட் 8.66 ஆகவும் உள்ளது. சிறந்த பந்து வீச்சு 3/17. இதன் அடிப்படையில் 2000 ரன்கள் + 50 விக்கெட்டுகளை எடுத்த ஐபிஎல் வீரர்களில் 6 ஆவது வீரராக பாண்ட்யா இணைந்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய அணியின் ஷேன் வாட்சன் 3,874 ரன்கள் + 92 விக்கெட்டுகள், கிரோன் பொலார்டு 3,412 ரன்கள் + 69 விக்கெட்டுகள், ரவிந்திர ஜடேஜா 2,531 ரன்கள் + 138 விக்கெட்டுகள், ஜேக்கஸ் காலிஸ் 2,427 ரன்கள் + 65 விக்கெட்டுகள், ஆண்ட்ரே ரஸல் 2,095 ரன்கள் + 92 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.