முகப்பு /செய்தி /விளையாட்டு / "கவலை வேண்டாம்... தலைவன் தோனி இருக்கிறான்..." சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹர்பஜன் ஆறுதல்.. வைராலகும் ட்வீட்..!

"கவலை வேண்டாம்... தலைவன் தோனி இருக்கிறான்..." சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஹர்பஜன் ஆறுதல்.. வைராலகும் ட்வீட்..!

எம்எஸ் தோனியுடன் ஹர்பஜன் சிங்

எம்எஸ் தோனியுடன் ஹர்பஜன் சிங்

IPL 2023 | சிஎஸ்கே ரசிகர்கள் கலங்க வேண்டாம் என ஹர்பஜன் சிங் ஆறுதல் கூறி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

2023 ஐபிஎல் திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து பேட் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அபாரமாக ஆடி 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் சென்னை அணி கேப்டன் தோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து 7 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார்.

179 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாஹா மற்றும் சுப்மன் கில் அபரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளத்தை போட்டு தந்தனர். குறிப்பாக சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார்.

இறுதியில் குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோல்வி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்த நிலையில், அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து ஜம்பவானுமான ஹர்பஜன் சிங், ரசிகர்களை கலங்க வேண்டாம் என அறுதல் கூறி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: “மனசோ இப்போ தந்தியடிக்குது”... ஐபிஎல் பிரமாண்ட தொடக்க விழா... நடனமாடி அசத்திய தமன்னா, ராஷ்மிகா...!

அவர் தனது ட்விட்டர் பதிவில், "யுத்தத்துல முதல்ல யார் அடிக்குறாங்கன்னு கணக்கு இல்லை...முதல்ல யார் கீழே விழுறதுதான் கணக்கு.. இவங்க விழுவது போல் கொஞ்சம் விழுவாங்க எதிரிகள் சுகம் காண.. கவலை வேண்டாம் தலைவன் தோனி இருக்கிறான் மயங்காதே" என்று தெரிவித்துள்ளார். ஹர்பஜன் தமிழில் இதுபோல அடிக்கடி ட்வீட் செய்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டுவார்.

எனவே, இவரது ட்விட்டர் கணக்கை ஆர்வத்துடன் பலரும் பின்தொடர்கிறார்கள். சென்னை அணி தனது அடுத்த போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.

First published:

Tags: CSK, Harbhajan Singh, IPL, IPL 2023, MS Dhoni