ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற டெல்லி அணி 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
சால்ட், ஷமி வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் டேவிட் வார்னர் 2 ரன்னில் ரன் அவுட் ஆக பிரியம் கார்க் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிலீ ரூசோ 8 ரன்களும், மணிஷ் பாண்டே 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. அதிகபட்சமாக 50-60 ரன்னில் ஆல் அவுட் ஆகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து இணைந்த அக்சர் படேல் மற்றும் அமான் ஹகிம் கான் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது
What a spell this from @MdShami11 🤯🤯
He finishes his lethal spell with figures of 4/11 😎
Follow the match ▶️ https://t.co/VQGP7wSZAj #TATAIPL | #GTvDC pic.twitter.com/85KNVfYXEf
— IndianPremierLeague (@IPL) May 2, 2023
30 பந்துகளை எதிர்கொண்ட அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹகிம் கான் 44 பந்தில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்தார். ரிபல் படேல் 13 பந்தில் 23ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.