முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

IPL 2023 : பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் அணி வீரர்கள்

குஜராத் அணி வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனைப் போன்று நடப்பு சீசனிலும் தடுமாறி வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணி 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலித்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் சென்னை அணியின் நெட் ரன் ரேட் (+0.662) குஜராத் டைட்டன்ஸ் அணியின் நெட் ரன் ரேட்டை (+0.580) அதிகமாக இருப்பதால் சென்னை அணி முதலிடத்திற்கு சென்றுள்ளது.

பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிதான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதன் காரணமாக முதல் 4 இடங்களை பிடிக்க ஐபிஎல் அணிகள் தீவிரம் காட்டுகின்றன. 3 ஆவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 4 ஆவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் உள்ளன. அடுதத 2 இடங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆகியவை 7 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்று 8 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும் நெட் ரன் ரேட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பெங்களூரு 5 வது இடத்திலும், பஞ்சாப் அணி 6 ஆவது இடத்திலும் உள்ளது.

top videos

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சீசனைப் போன்று நடப்பு சீசனிலும் தடுமாறி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 7 ஆவது இடத்திற்கு சென்றுள்ளது. 8 ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 9 ஆவது இடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், 10 ஆவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் உள்ளன.

    First published:

    Tags: IPL, IPL 2023