முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : 136 ரன்களை சேஸிங் செய்ய முடியாத லக்னோ அணி… குஜராத்திடம் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி

IPL 2023 : 136 ரன்களை சேஸிங் செய்ய முடியாத லக்னோ அணி… குஜராத்திடம் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி

கே.எல். ராகுல்

கே.எல். ராகுல்

இந்த போட்டியில் 61 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களை கேப்டன் ராகுல் எடுத்தார். அவரது ஆமை வேக ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 136 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸிடம் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் 61 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களை கேப்டன் ராகுல் எடுத்தார். அவரது ஆமை வேக ஆட்டம் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோன்று, 135 ரன்களை அற்புதமாக டிஃபென்ட் செய்து குஜராத் அணியின் பவுலர்கள் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர்.

டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். கடந்த சில போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்த கில் இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டடிமழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்த சாஹா பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சாஹா 47 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த அபினவ் மனோகர் 3 ரன்னிலும், விஜய் சங்கர் 10 ரன்னிலும், மில்லர் 6 ரன்னிலும் வெளியேறினர்.

top videos

    விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 135 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி லக்னோ அணியினர் களத்தில் இறங்கினர். குறைந்த ஸ்கோர் என்பதற்காக ஆமை வேகத்தில் அவர்கள் விளையாடியதால் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. கைல் மில்லர்ஸ் 24 ரன்னிலும், க்ருனல் பாண்ட்யா 23 ரன்னிலும் வெளியேற கேப்டன் ராகுல் பொறுப்புடன் விளையாடி 61 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 128 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    First published:

    Tags: IPL, IPL 2023