முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

IPL 2023 : 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வென்றது குஜராத் டைட்டன்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணி

குஜராத் டைட்டன்ஸ் அணி

இலக்கு கடினமாக இருந்தாலும் அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அணி என்பதால் வெற்றிக்காக லக்னோ அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமன் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சாஹா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் அவர் மீது கடும் விமர்சனங்கள் குவிந்திருந்தன. இந்நிலையில் அவற்றுக்கு தனது பேட் மூலம் சாஹா இன்று பதில் கொடுத்துள்ளார். 43 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர் மற்றும் 10 பவுண்டரியுடன் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 15 பந்துகளில் 2சிக்சர் மற்றும் 1 பவுண்டரியுடன் 25 ரன்களும், டேவிட் மில்லர் 21 ரன்களும் எடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் இன்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 51 பந்துகளில் 7 சிக்சர் 2 பவுண்டரியுடன் 94 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 227 ரன்கள் குவித்தது. இதையடுத்து 228 ரன்கள் எடுத்தால்  வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

இலக்கு கடினமாக இருந்தாலும் அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட அணி என்பதால் வெற்றிக்காக லக்னோ அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் குவின்டன் டி காக் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுக்க அடுத்து வந்த தீபக் ஹுடா 11 ரன்னும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 4 ரன்களும், நிகோலஸ் பூரன் 3 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்தவர்களில் ஆயுஷ் பதோனி அதிரடியாக விளையாடி 21 ரன்கள் சேர்த்தார்.  20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

First published:

Tags: IPL, IPL 2023