தமிழக வீரர் விஜய் சங்கர் 24 பந்துகளில் 51 ரன்கள் எடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 8 போட்டிகளில் 6 இல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் குஜராத் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ஜெகதீசன் மற்றும் குர்பாஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர் ஜெகதீசன் 15 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் ஐயர் 11 ரன்னும், நிதிஷ் ராணா 4 ரன்னும் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரின்கு சிங் 20 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 39 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 81 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். கடைசி நேரத்தில் ஆண்ட்ரே ரஸல் 19 பந்தில் 3 சிக்சர் மற்றும் 2 பவுண்டரியுடன் 34 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.
தொடக்க வீரர் சாஹா 10ரன்னில் ஆட்டமிழக்க கில்லுடன் இணைந்த கேப்டன் ஹ்ர்திக் பாண்ட்யா பொறுஐமயாக ரன்களை சேர்த்தார். 20 பந்துகளை எதிர்கொண்ட பாண்ட்யா26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 35 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார் சுப்மன் கில். 11.2 ஓவர்களில் குஜராத் அணி 93 ரன்ள் எடுத்திருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது இணைந்த தமிழக வீரர் விஜய் சங்கரும், டேவிட் மில்லரும் கொல்கத்தா பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சிக்சரும் பவுண்டரிகளும் பறந்ததால் இலக்கு எளிதாக மாறியது. 5 சிக்சர் 2 பவுண்டரியுடன் 24 பந்தில் விஜய் சங்கர் 51 ரன்களும், 2 சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் 18 பந்தில் மில்லர் 32 ரன்களும் அதிரடியாக எடுத்தனர். 17.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6 இல் வெற்றி பெற்று குஜராத் அணி பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.