முகப்பு /செய்தி /விளையாட்டு / குஜராத் டைட்டன்ஸ் அணியில் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக தசுன் ஷனகா சேர்ப்பு

குஜராத் டைட்டன்ஸ் அணியில் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக தசுன் ஷனகா சேர்ப்பு

தசுன் ஷனகா

தசுன் ஷனகா

சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் ஷனகா 124 ரன்களை விளாசியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187 ஆக உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ள கேன் வில்லியம்சனுக்கு பதிலாக தசுன் ஷனகா குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளியன்று தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. சென்னை அணியின் பேட்டிங்கின் போது 13 ஓவது ஓவரில் ருதுராஜ் அடித்த பந்தை கேன் வில்லியம்சன் தடுக்க முற்பட்டார். அப்போது வில்லியம்சனின் முழங்கால் தரையில் மோதியதால் காயம் ஏற்பட்டது. இதனால் துடித்துப் போன அவரை, குஜராத் அணியின் உதவியாளர்கள் பத்திரமாக அழைத்துச் சென்றனர். முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் வில்லியம்சன் குணம் அடைய நீண்ட நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும், தனது சொந்த நாடான நியூசிலாந்திற்கு வில்லியம்சன் புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் வில்லியம்சனுக்கு மாற்று வீரராக இலங்கை அணியின் தசுன் ஷனகா குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனகா தற்போது இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பில் உள்ளார்.

top videos

    சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 கிரிக்கெட் தொடரில் அவர் 124 ரன்களை விளாசியுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 187 ஆக உள்ளது. ஆல் ரவுண்டராகவும் தனது திறமையை ஷனகா சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இதனால் தசுன் ஷனகாவின் தேர்வு குஜராத் அணிக்கு மேலும் வலிமை சேர்க்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அவரை ரூ. 50 லட்சத்திற்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் தொடர்தான் அவர் விளையாடப் போகும் முதல் சீசனாக அமைந்துள்ளது. இதற்கிடையே, நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    First published:

    Tags: IPL, IPL 2023