ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னணி அணியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியை ஒரு முறை கூட வென்றதில்லை. இந்த மோசமான ரிக்கார்ட் இன்று முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பில் சென்னை அணியின் ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, கடந்த ஆண்டுதான் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றது.
குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பிருந்தார். பேட்டிங், பவுலிங், கேப்டன்ஷிப் என பல தளங்களில் தனது திறமையை நிரூபித்த ஹர்திக் பாண்ட்யா, இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை இதுவரை 3 முறை எதிர்கொண்டுள்ளது. இந்த 3 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றது இல்லை. இந்த 3 போட்டிகளிலுமே இரு அணிகளும் 200 ரன்களுக்கு குறைவாகவே எடுத்துள்ளன.
இதையும் படிங்க - IPL 2023 : சென்னை – குஜராத் மேட்ச்சின் போது மழை பெய்தால் முடிவு எப்படி இருக்கும்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முன்னணி அணியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத்திடம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள குவாலிஃபயர் 1 ஆட்டத்தில், குஜராத்தை சிஎஸ்கே வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளார்கள். இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். இறுதிப்போட்டி வரும் ஞாயிறு அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. கடந்த சீசனை போலவே நடப்பு சீசனிலும் லீக் போட்டியில் 10 ஆட்டங்களில் குஜராத் அணி வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.