முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மழை காரணமாக ஐபிஎல் ஃபைனல் நாளை ஒத்தி வைக்கப்படுகிறது…

IPL 2023 : மழை காரணமாக ஐபிஎல் ஃபைனல் நாளை ஒத்தி வைக்கப்படுகிறது…

தோனி - ஹர்திக் பாண்ட்யா

தோனி - ஹர்திக் பாண்ட்யா

சாம்பியன் ஆகும் அணிக்கு 20 கோடி ரூபாயும் இரண்டாமிடம் பெறும் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை (திங்கள் கிழமை)  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தகுதி பெற்றன. ஞாயிறன்று இரவு 7.30க்கு மேட்ச் தொடங்க திட்டமிடப்படடிருந்த நிலையில் , மழை குறுக்கிட்டதால் டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்த நிலையில், மைதானம் கடுமையாக ஈரம் அடைந்ததால்  ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இரவு 9.35-யை தாண்டி மழை தொடர்ந்த நிலையில், ஓவர்கள் குறைக்கப்பட்டு மேட்ச் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை தொடர்ந்ததால் போட்டி நாளை (திங்கள் கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியை பொறுத்தவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற அனுபவ அணி எனும் பலத்துடன் களமிறங்குகிறது. இப்போட்டியின் மூலம் 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் முதல் வீரர் எனும் சிறப்பை தோனி பெறவுள்ளார்.

இதில் சென்னை வென்றால் 5 முறை சாம்பியனாக உள்ள மும்பை கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை தோனி சமன் செய்வார். ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணியை பொறுத்தவரை, அணி தொடங்கப்பட்டதிலிருந்தே அதாவது கடந்த 2 சீசன்களாகவே பலரும் ஆச்சர்யப்படும் வகையில் ஃபுல் பார்மில் இருந்து வருகிறது. குறிப்பாக இப்போட்டியில் சுப்மன் கில் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் சாம்பியன் ஆகும் அணிக்கு 20 கோடி ரூபாயும் இரண்டாமிடம் பெறும் அணிக்கு 13 கோடி ரூபாயும் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023