முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 Final : ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றால் ஓவர்கள் குறைக்கப்படும்…

IPL 2023 Final : ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றால் ஓவர்கள் குறைக்கப்படும்…

அகமதாபாத் மைதானம்

அகமதாபாத் மைதானம்

மழை விட்டு விட்டுபெய்து வருவதால் போட்டி நாளை நடத்தப்பட வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Gujarat, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை மழை குறுக்கிட்டுள்ள நிலையில், ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதில் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை காரணமாக தாமதமாகி வந்தது. இந்நிலையில் மழை நீடித்து வருவதால் இனிமேல் போட்டி தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்பட்டு மேட்ச் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழை விட்டு விட்டுபெய்து வருவதால் போட்டி நாளை நடத்தப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: IPL, IPL 2023