லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமேக்ஸ் போட்டி அனல் பறக்கவுள்ளது. சாம்பியன் கோப்பைக்கான யுத்தத்தில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – நடப்பு சாம்பியனான குஜராத் டைடன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது. தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணியுடன் தோல்வியை சந்தித்து வெளியேறிய குஜராத் அணி, குவாலியபர் சுற்றில் மும்பையை துவம்சம் செய்து மீண்டும் சென்னை அணியுடன் ஃபைனலில் மோதுகிறது.
முதல் போட்டியில் இதே மைதானத்தில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்க சென்னையும், பிளே ஆஃபின் தோல்விக்கு பழிதீர்க்க குஜராத்தும் கங்கணம் கட்டுகின்றன. சொந்த மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவது குஜராத் அணிக்கு கூடுதல் சிறப்பாக அமைந்தாலும் தோனியின் மஞ்சள் படை இதை தகர்த்தெறிய காத்திருக்கிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் மழை பெய்தால் முடிவு என்னவாக இருக்கும் என ஐபிஎல் விதிமுறைகள் என்ன சொல்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். இன்று அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் மழை பெய்து விளையாடவில்லை என்றால் ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் உள்ளதா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
2022-ல் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இருந்தது. ஆனால் பிசிசிஐ வெளியிட்ட பிளேஆஃப் அட்டவணையின்படி ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் நாள் இல்லை.
இன்று இறுதிப்போட்டி தொடங்கிய பின்னர் மழை குறுக்கிட்டு விளையாட முடியாமல் போனால் அப்படி ரிசர்வ் நாள் இருந்தால், இறுதிப் போட்டி நாளை கூட போட்டி நடைபெறும். ஆனால் ரிசர்வ் நாள் குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
இந்த நிலையில் மழையால் போட்டி தாமதம் ஏற்பட்டால் போட்டியை முடிக்க கூடுதல் கட் ஆஃப் நேரம் உள்ளதா? ஆம், போட்டியை முடிக்க கூடுதலாக 120 நிமிடங்கள் அல்லது 2 மணிநேரம் உள்ளது. எனவே, ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கான கட் ஆஃப் நேரம் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்குத் தொடங்கினால் இரவு 11.56 மணிக்கு போட்டி நிறைவடையும் என்பது போட்டியின் விதிமுறை.
மேலும் ஒரு இன்னிங்ஸ் முழுமையாக நிறைவடைந்து இரண்டாவது பேட்டிங் செய்யும்போது பாதியில் மழை பெய்தால் DLS மூலம் வெற்றி தீர்மானிக்கப்படும். ஒரு வேளை இரவு 11 மணி வரை மழை பெய்தால் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இறுதிப்போட்டி நடைபெறும். 5 ஓவர்கள் வீசவும் சாத்தியமில்லை என்றால் வாய்ப்பு இருந்தால் சூப்பர் ஓவர் வீசி போட்டி நடத்தி முடிக்கப்படும் என்பது 2022 ஐபிஎல் தொடருக்கான பிளே ஆப் விதிமுறைகள் ஆகும்.
மேலும் மழையால் போட்டி இன்று நடத்த முடியவில்லை. நாளை ரிசர்வ் நாளிலும் போட்டி நடத்த முடியவில்லை என்றால் கடந்த ஆண்டு விதிமுறைப்படி புள்ளிப்பட்டியலில் முதலிடம் இருக்கும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும் என்பதும் கடந்த ஆண்டு விதிமுறையில் உள்ளது.
மழையால் போட்டி பாதிப்பு ஏற்பட்டால் என்ன விதிமுறை என்பது குறித்தும் மழை பெய்யும்போது ஐபிஎல் நிர்வாகம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் போட்டி நடைபெறும்போது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை நிலவரங்கள் தெரிவித்துள்ளது.
மேலும் 40 சதவீதம் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேக மூட்டத்துடன், 30 மற்றும் 36 டிகிரி செல்சியஸ் சுற்றி இருக்கும். ஈரப்பதம் சுமார் 50 சதவீதம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CSK, Gujarat Titans, IPL 2023