முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐபிஎல் தொடரில் வருமானத்தை குவிக்கும் கேமிங் நிறுவனங்கள்… வியக்க வைக்கும் புதிய தகவல்

IPL 2023 : ஐபிஎல் தொடரில் வருமானத்தை குவிக்கும் கேமிங் நிறுவனங்கள்… வியக்க வைக்கும் புதிய தகவல்

ஃபேன்டஸி கேமிங் துறைகளின் வருமானம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஃபேன்டஸி கேமிங் துறைகளின் வருமானம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்தின் மூலம் எந்தவொரு பயனாளியும் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்த்து மகிழலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேமிங் நிறுவனங்களின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதுகுறித்து வியக்க வைக்கும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. 50 ஓவர் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வம் கொடிகட்டி பறந்த நிலையில் 20 ஓவர் ப்ரீமியர் லீக் தொடர் 2007 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ நிர்வகிக்கிறது.. தற்போது உலகின் பணக்கார விளையாட்டு போட்டி தொடராக ஐபிஎல் பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் ஸ்பான்சர்களாக இடம்பெற்றுள்ள கேமிங் துறைகள் கடந்த சில சீசன்களில் அதிக லாபம் பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2019 ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது ரூ. 990 கோடி அளவுக்கு ஃபேன்டஸி கேமிங் துறைகளுக்கு வருமானம் கிடைத்ததாகவும், நடப்பு சீசனில் அதிகபட்சமாக ரூ. 3,100 கோடி அளவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 ஆண்டுகளில் ஐபிஎல்லில் கேமிங் நிறுவனங்களுக்கான  வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது ஃபேன்டஸி கேமிங் துறையில் ட்ரீம் லெவென் (Dream11), மை லெவென் சர்க்கிள் (My11Circle) நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளன. இந்த நிறுவனங்களின் திறமையான மார்க்கெட்டிங் மற்றும் புரொமோஷன் திட்டங்கள் வருமானத்தை பெற்றுத் தருவதாக பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

கடந்த சீசனின்போது ஐபிஎல் தொடரில் ஃபேன்டஸி கேமிங் நிறுவனங்கள் அதிகபட்சமாக ரூ. 2,260 கோடி வருமானம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முந்தைய ஆண்டு கிடைத்த ரூ. 1,460 கோடியை விடவும் 55 சதவீதம் இது அதிகமாகும். இனிவரும் ஆண்டுகளில் இந்த வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.. இதன் மூலம் மற்ற விளையாட்டுகளுக்கும் வளர்ச்சியடைய அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கும் பயனாளிகள் முந்தைய ஆண்டுகளை விட நடப்பு சீசனில் 30 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா நிறுவனம் இலவசமாக நேரடிய ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா ஆப் மற்றும் இணையதளத்தின் மூலம் எந்தவொரு பயனாளியும் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்த்து மகிழலாம்.

First published:

Tags: IPL, IPL 2023