முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ரூ. 18.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட் சாம் கரன்… சுமாரான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி

IPL 2023 : ரூ. 18.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட் சாம் கரன்… சுமாரான ஆட்டத்தால் ரசிகர்கள் அதிருப்தி

சாம் கரன்

சாம் கரன்

கடந்த 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள கரன் 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவரது எகானமி ரேட் 10 ரன்களுக்கும் அதிகமாக உள்ளது

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரூ. 18.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணியின் சாம் கரன் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இவரது பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த சில போட்டிகளில் படுதோல்வியடைந்துள்ள நிலையில் ரசிகர்களும், அணி நிர்வாகமும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும் அவர் தனது திறமையை நிரூபிப்பார் என்று அணியின் பயிற்சியாளர் சார்ல் லாங்வெட் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான  போட்டியின்போது ஆண்ட்ரே ரசல், சாம் சரனின் பந்து விச்சில் 4 பந்துகளில் 3 சிக்சர்களை விளாசினார்.

கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஸல், சாம் கரனின் ஓவரில் ஃபார்முக்கு திரும்பியிருப்பது கொல்கத்தா அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் மட்டும் 3 ஓவர்களை வீசிய சாம் கரன் 44 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதில் அவர் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்கவில்லை. கடந்த 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள கரன் 7 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். அவரது எகானமி ரேட் 10 ரன்களுக்கும் அதிகமாக உள்ளது. மிக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட அவர், சுமாரான ஆட்டத்தை  வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    இதுகுறித்து பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் சார்ல் லாங்வெட் கூறியதாவது- அணிக்கு வெற்றியை எளிதாக தேடித் தரக்கூடிய ஆட்டக்காரர்களில் சாம் கரனும் ஒருவர். எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், அடுத்து வரும் ஆட்டங்களில் அணியின் வெற்றிக்கு அவர் முக்கிய காரணமாக இருப்பார். ஆண்ட்ரே ரசலின் ஆட்டம் அருமையாக இருந்தது. அவரது விக்கெட்டை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். அவர் வழக்கமாக சிக்சர் அடிக்கும் இடத்திற்கு வெளியே பந்துகளை வீசினோம். இருப்பினும் அவர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: IPL, IPL 2023