முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வருவார்’ – ஜெய்ஸ்வாலை பாராட்டும் ராபின் உத்தப்பா

‘இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வருவார்’ – ஜெய்ஸ்வாலை பாராட்டும் ராபின் உத்தப்பா

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தாலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் கிரிக்கெட் ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் கவர்ந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக வருவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்சர் மற்றும் 16 பவுண்டரியுடன் 124 ரன்களை குவித்தார்.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 19.3 ஓவரில் 214 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணின் சூர்யகுமார் யாதவ் 55 ரன்களும், டிம் டேவிட் 14 பந்தில் 45 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். குறிப்பாக கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டபோது, முதல் 3 பந்தில் 3 சிக்சர்களை டிம் டேவிட் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தாலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் கிரிக்கெட் ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் கவர்ந்தது. . இந்த நிலையில் யஷஸ்வி குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறியதாவது-

top videos

    கொஞ்சம் கூட அச்சமின்றி ஜெய்ஸ்வால் மும்பை அணிக்கு எதிராக பேட்டிங் செய்திருக்கிறார். பந்துகளை அவர் மிக தைரியமாக எதிர்கொண்ட விதத் பாராட்ட வேண்டும். இப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அதற்காக பல மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அதற்கான பலனை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். இந்திய அணியின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக யஷஸ்வி இருப்பார். என்று கூறினார். மும்பை அணியின் டிம் டேவிட் பேட்டிங் குறித்து முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கூறுகையில், ‘மிகவும் நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி டிம் டேவிட் சர்வ சாதாரணமாக சிக்சர்களை விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஃபினிஷர்ரோல் மிகவும் முக்கியமானது. சிறிய தவறு செய்தாலும் அதை டிம் டேவிட் சிக்சராக மாற்றி விடுவார் என்று பவுலர்களுக்கு நன்றாகவே தெரியும். ஃபினிஷர் ரோலை டிம் டேவிட் சிறப்பாக செய்துள்ளார். அவரிடமிருந்து இதுபோன்ற ஆட்டங்களை இன்னும் பார்க்கலாம்’ என்று கூறியுள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023