குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, சென்னையின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பாக வியூகம் வகுத்து நேற்று ஆட்டம் இழக்க செய்தார். இது தொடர்பான வீடியோ ஒன்றை தோனியின் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் முதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது.
இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை, 4 முறை பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொண்டது. இதற்கு முன்பு நடந்த 3 போட்டிகளில் குஜராத் அணியே வெற்றி பெற்று வந்த நிலையில், இந்த போட்டியில் சென்னை வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ருத்ராஜ் 60 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். டேவிட் மில்லர், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர் உள்ளிட்ட முக்கியமான ஆட்டக்காரர்கள் அணியில் இருப்பதால் இந்த போட்டியில் குஜராத் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க - IPL 2023 : எலிமினேட்டர் சுற்றில் மும்பை – லக்னோ அணிகள் இன்று மோதல்…
தொடக்க வீரர் சாஹா ஆட்டம் இழந்து வெளியேற, அடுத்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களத்தில் இறங்கினார். அப்போது பேக்வார்டு ஸ்கொயர் திசையில் இருந்த ரவீந்திர ஜடஜாவை, தோனி பேக்வார்ட் பாயிண்ட் திசைக்கு கொண்டு வந்து நிறுத்தினார். இந்த ஃபீல்டிங் மாற்றம் ஏற்பட்ட அடுத்த பந்தை ஹர்திக் பாண்டியா அடிக்க அது நேரடியாக ஜடேஜாவின் கைக்குள் சென்று விழுந்தது.
👀 Dhoni moved a fielder to the off-side a ball prior to Hardik getting dismissed! #GTvCSK #TATAIPL #Qualifier1 #IPLonJioCinema pic.twitter.com/oJow2Vp2rj
— JioCinema (@JioCinema) May 23, 2023
தோனியின் வியூகத்திற்கு உடனடி பலன் கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுபற்றி கூறிய கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி ஹர்திக் பாண்டியாவின் ஈகோவுடன் தோனி விளையாடிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.