முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஆர்.சி.பி.-க்கு எதிரான போட்டியில் பவுலிங்கை தேர்வு செய்தது டெல்லி கேபிடல்ஸ்

IPL 2023 : ஆர்.சி.பி.-க்கு எதிரான போட்டியில் பவுலிங்கை தேர்வு செய்தது டெல்லி கேபிடல்ஸ்

டேவிட் வார்னர் - டெல்லி அணியின் கேப்டன்

டேவிட் வார்னர் - டெல்லி அணியின் கேப்டன்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்.சி.பி. – டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. இந்த தொடரில் இதுவரை பங்கேற்ற 4 போட்டியிலும் டெல்லி அணி தோல்வியடைந்துள்ள நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் டெல்லி அணியின் ரசிகர்கள் உள்ளனர். பெங்களூரு சின்ன சாமி மைதானத்தில் ஆர்.சி.பி. – டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.

டெல்லி அணியில் இன்று விளையாடும் வீரர்கள் – டேவிட் வார்னர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், யாஷ் துல், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

பெங்களூரு அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், வெய்ன் பார்னல், முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

top videos

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 8 ஆவது இடத்திலும், 4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்து டெல்லி அணி 10 ஆவது இடத்திலும் உள்ளன.

    First published:

    Tags: IPL, IPL 2023