முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘டெல்லி அணி விரைவில் வெற்றிப் பாதைக்கு திரும்பும்’ – துணை கேப்டன் அக்சர் படேல் நம்பிக்கை

‘டெல்லி அணி விரைவில் வெற்றிப் பாதைக்கு திரும்பும்’ – துணை கேப்டன் அக்சர் படேல் நம்பிக்கை

அக்சர் படேல்

அக்சர் படேல்

எங்கள் ஆட்டத்தின் முடிவுகள் எங்களுக்கு அதிருப்தி அளிக்கின்றன. ஆனால் நீண்ட நாட்களுககு பின்னர் ரசிகர்கள் முன்பு விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

டெல்லி அணி விரைவில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று அந்த அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி தான் பங்கேற்ற 2 பேட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என 2 துறையிலும் பலவீனமாக காணப்படும் டெல்லி அணி, அதிக வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். டெல்லி அணி தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸிடன் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் வரும் சனிக்கிழமையன்று டெல்லி அணி மோதவுள்ளது. 2 போட்டிகளில் டெல்லி அணி படு தோல்வியை சந்தித்திருப்பதால் அதன் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளார்கள். இந்நிலையில் தோல்வி குறித்து டெல்லி அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- நாம் ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். இன்னும் அதிக மேட்ச்சுகள் உள்ளன.

நீண்ட நாட்களுககு பின்னர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து நாங்கள் விளையாடுகிறோம். இதனால் நாங்கள் எங்களது முழு திறமையை வெளிப்படுத்துவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்கான நேரம் வந்து விட்டால் பின்னர் டெல்லி அணியின் ஆட்டம் அதிரடியாக இருக்கும்.  எங்கள் ஆட்டத்தின் முடிவுகள் எங்களுக்கு அதிருப்தி அளிக்கின்றன. ஆனால் நீண்ட நாட்களுககு பின்னர் ரசிகர்கள் முன்பு விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மீதமுள்ள ஆட்டங்களில் எங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்காக உழைப்போம். எங்கள் மேட்ச்சை பார்ப்பதற்கு ரிஷப் பந்த் வந்தது மகிழ்ச்சி அளித்தது. குஜராத் அணி வீரர்களும் அவரை பார்த்து விரைந்து குணமடைய வாழ்த்தினர். இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் அணியின் கேப்டனாக செயல்பட, துணை கேப்டன் பொறுப்பு அக்சர் படேலுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: IPL, IPL 2023