முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடம்… டெல்லி அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறார் பான்டிங்

IPL 2023 : பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடம்… டெல்லி அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்கிறார் பான்டிங்

ரிக்கி பான்டிங்

ரிக்கி பான்டிங்

இரு ஜாம்பவான்கள் முக்கிய பொறுப்பில் இருந்தும் டெல்லி அணி படு தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதற்கு பொறுப்பு ஏற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மாஷ், அக்சர் படேல், ஆன்ரிக் நோட்ஜ் உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் இருந்தும்  டெல்லி அணி தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி இடத்தை பிடித்துள்ளது.

டெல்லி அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 4 இல் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்ததால் டெல்லி அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த அணியின் இயக்குனராக சவுரவ் கங்குலி, தலைமை பயிற்சியாளராக ரிக்கி பான்டிங் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இரு ஜாம்பவான்கள் முக்கிய பொறுப்பில் இருந்தும் டெல்லி அணி படு தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்று அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பான்டிங் விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - எங்கள் தோல்விக்கு இவர்தான் காரணம்... வெளிப்படையாக பேசிய ரோகித் சர்மா..!

இதுகுறித்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான இர்பான் பதான் கூறுகையில், ‘டெல்லி அணியில் கங்குலி இருப்பது அணிக்கு முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது. அவரிடம் பயிற்சியாளர் பொறுப்பை அளித்திருந்தால் நிச்சயமாக அதிக வெற்றிகளை டெல்லி அணி குவித்திருக்கும். இந்திய வீரர்களின் சைக்காலஜி கங்குலிக்கு மிகவும் நன்றாக தெரியும். டிரெஸிங் ரூமை எப்படி நடத்துவது என்று கங்குலி நன்றாக அறிந்து வைத்துள்ளார். எனவே, அவர் பயிற்சியாளராக இருந்தால் அணியில் நல்ல மாற்றங்கள் நடந்திருக்கும்.’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: IPL