முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஆர்.சி.பி.-க்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி பெற 182 ரன்கள் இலக்கு

IPL 2023 : ஆர்.சி.பி.-க்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி பெற 182 ரன்கள் இலக்கு

விராட் கோலி - டூப்ளசிஸ்

விராட் கோலி - டூப்ளசிஸ்

அதிரடியாக விளையாடிய மஹிபால் லோம்ரோர் 29 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.  டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து  தாடக்க வீரர்களாக விராட் கோலியுடன் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 10.3 ஓவரில் அணி 82 ரன்கள் சேர்த்திருந்தபோது டூப்ளசிஸ் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடந்த சில போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் டெல்லியின் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மஹிபால் லோம்ரோர் 29 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்னும், அனுஜ் ராவத் 8 ரன்னும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 181 ரன்கள் சேர்த்துள்ளது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

First published:

Tags: IPL, IPL 2023