முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட டெல்லி அணி…

IPL 2023 : ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்ட டெல்லி அணி…

டெல்லி கேபிடல்ஸ் அணி

டெல்லி கேபிடல்ஸ் அணி

8 ஐபிஎல் அணிகள் இன்னும் தலா 4 போட்டிகளில் மோதவுள்ளன. வரும் 21 ஆம் தேதி ஞாயிறு வரையில் லீக் போட்டிகள் நடைபெறுகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை டெல்லி கேபிடல்ஸ் அணி தக்க வைத்துள்ளது. இந்த போட்டியில் 182 ரன்களை சேஸ் செய்த டெல்லி அணி பிலிப் சால்ட்டின் அதிரடி ஆட்டத்தின் மூலம் (87 ரன் (45 பந்துகளில்) எளிதாக வெற்றி பெற்றது. ஐபிஎல் லீக் தொடரில் 3 இல் 2 பங்கு ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த நிலையில் அடுத்த சுற்றான ப்ளே ஆஃப் சுற்றை குறி வைத்து அணிகள் விளையாடி வருகின்றன.

பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 3 இல் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி அணி 10 போட்டிகளில் விளையாடி 4 இல் வெற்றி பெற்று 9 ஆவது இடத்திலும் கொல்கத்தா அணி 8 ஆவது இடத்திலும், பஞ்சாப் 7 ஆவது இடத்திலும் உள்ளன. நேற்று சென்னைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த மும்பை அணி 6 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி 5 ஆவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 ஆவது இடத்திலும் இருக்கிறது.

top videos

    ப்ளே ஆஃப் சுற்றுக்கு பாயின்ட்ஸ் டேபிளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி முன்னேறும். அந்த வகையில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளைப்  பெற்றுள்ளது. இன்னும் 1 போட்டியில் குஜராத் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை பெறும். சென்னை அணி 13 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்திலும், லக்னோ அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன.  8 ஐபிஎல் அணிகள் இன்னும் தலா 4 போட்டிகளில் மோதவுள்ளன. வரும் 21 ஆம் தேதி ஞாயிறு வரையில் லீக் போட்டிகள் நடைபெறுகிறது. ப்ளே ஆஃப் சுற்று 23 ஆம்தேதி தொடங்கவுள்ளன. நேற்றைய போட்டிகளின் முடிவுப்படி பெங்களூரு அணியின் டூப்ளசிஸ் 10 போட்டிகளில் விளையாடி 511 ரன்கள் எடுத்து ஆரஞ்ச் தொப்பியையும், சென்னை அணியின் துஷார் தேஷ் பாண்டே 11 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளின் பர்ப்பிள் தொப்பியையும் வைத்துள்ளனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023