முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : கடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்… 5 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது டெல்லி கேபிடல்ஸ்

IPL 2023 : கடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்… 5 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது டெல்லி கேபிடல்ஸ்

வெற்றி பெற்ற உற்சாகத்தில் டெல்லி அணி வீரர்கள்.

வெற்றி பெற்ற உற்சாகத்தில் டெல்லி அணி வீரர்கள்.

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 53 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 130 ரன்கள் எடுத்த நிலையில் 131 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது குஜராத் டைட்டன்ஸ். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் களத்தில் இறங்கினர். சால்ட், ஷமி வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் டேவிட் வார்னர் 2 ரன்னில் ரன் அவுட் ஆக பிரியம் கார்க் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிலீ ரூசோ 8 ரன்களும், மணிஷ் பாண்டே 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதனால் 5 ஓவர்கள் முடிவில் 23 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியது. அதிகபட்சமாக 50-60 ரன்னில் ஆல் அவுட் ஆகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து இணைந்த அக்சர் படேல் மற்றும் அமான் ஹகிம் கான் இணை சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது

30 பந்துகளை எதிர்கொண்ட அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹகிம் கான் 44 பந்தில் 3 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்தார். ரிபல் படேல் 13 பந்தில் 23ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் முகமது ஷமி 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

தொடக்க வீரர் ரிதிமன் சாஹா வழக்கம்போல மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். சுப்மன் கில் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா 6 ரன்களும், டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை குஜராத் அணி இழந்த நிலையில் அடுத்து இணைந்த ஹர்திக் பாண்ட்யா – அபினவ் மனோகர் இணை பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் 5 ஆவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 17.1 ஓவரில் 94 ரன்களுக்கு குஜராத் அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடைசி 17 பந்துகளில் வெற்றி பெற 37 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ராகுல் தெவாட்டியா ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்து குஜராத் அணிக்கு நம்பிக்கை அளித்தார்.  இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து தோல்வியை தழுவியது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 53 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

top videos
    First published:

    Tags: IPL, IPL 2023