முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

IPL 2023 : டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

பஞ்சாப் கிங்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ் அணி.

மெதுவாக விளையாடுகிறார் என்று விமர்சிக்கப்பட்ட டேவிட் வார்னர் இந்த போட்டியில் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சதம் அடித்து அசத்தினார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு  செய்தது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

தொடக்க வீரர் கேப்டன் ஷிகர் தவான் 7 ரன்னும், லிவிங்ஸ்டோன் 4 ரன்னும், ஜிதேஷ் சர்மா 5 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து நடையைக் கட்டினர். சாம்கரன் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ஹர்ப்ரீத் பிரார், ஷாரூக்கான் ஆகியோர் தலா 2 ரன்கள் எடுத்து வெளியேறினர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் பிரப்சிம்ரன் ரன்களை எளிதாக குவித்தார். 65 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் மற்றும் 10 பவுண்டரியுடன் 103 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 167 ரன்கள் எடுத்தது.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணி பேட்டிங் செய்தபோது, அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். மெதுவாக விளையாடுகிறார் என்று விமர்சிக்கப்பட்ட டேவிட் வார்னர் இந்த போட்டியில் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பிலிப் சால்ட் 21 ரன்கள் சேர்க்க மிடில் ஆர்டர் வரிசையில் டெல்லி அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. மிட்செல் மார்ஷ் 3 ரன்னும், ரிலீ ரூசோ 5 ரன்னும், அக்சர் படேல் 1 ரன்னும், மனிஷ் பாண்டே ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அமான் ஹகிம், பிரவீன் துபே தலா 16  ரன்களும், குல்தீப் யாதவ் 10 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணியால் 138 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

First published:

Tags: IPL, IPL 2023