முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘எதிர்பார்த்ததை விட அதிக ரன்கள் குவித்து விட்டார்கள்’ – லக்னோ அணியை பாராட்டும் ரிக்கி பான்டிங்

‘எதிர்பார்த்ததை விட அதிக ரன்கள் குவித்து விட்டார்கள்’ – லக்னோ அணியை பாராட்டும் ரிக்கி பான்டிங்

ரிக்கி பான்டிங்

ரிக்கி பான்டிங்

முதல் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தது எங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. நாங்கள் ஃபீல்டிங்கை இன்னும் கவனிக்க வேண்டும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக ரன்களை லக்னோ அணி குவித்து விட்டதாக அதனிடம் தோல்வியடைந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் டெல்லி அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 193 ரன்களை குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்திற்கு பின்னர் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது-

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான ரன்களை லக்னோ அணி எடுத்து விட்டது. முதல் 4 ஓவர்களுக்கு பின்னர் எங்கள் அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. முக்கியமான கேட்ச்சுகளை விட்டு விட்டோம். குறிப்பாக மேயர்ஸ் கொடுத்த கேட்ச்சை மிஸ் செய்ததால், அவர் பின்னர் அதிக ரன்களை எடுத்து விட்டார். நல்ல ஆட்டக்காரர்களுக்கு 2ஆவது வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்கிறது. அதைத் தான் இந்த ஐபிஎல்லின் சிறப்பான விஷயமாக கருதுகிறேன். 2 ஆவது வாய்ப்பு கிடைக்கப்பெற்ற ஆட்டக்காரர்கள் எதிரணியை துவம்சம் செய்கின்றனர்.

முதல் போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தது எங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. நாங்கள் ஃபீல்டிங்கை இன்னும் கவனிக்க வேண்டும். குறிப்பாக இந்த மேட்ச்சில் நாங்கள் 16 சிக்சர்களை எதிரணிக்கு கொடுத்திருக்கிறோம் என்பதை மிக முக்கியமாக கவனிக்க வேண்டும். இப்படி சிக்சர்களில் ஒரு அணி அதிக ரன்களை கொடுத்தால் அதனால் மீண்டு வருவது மிகவும் கஷ்டமாகும். மைதானத்தை பொருத்தளவில் 2 ஆவது பேட்டிங் செய்யும் அணியால் 190 ரன்னுக்கும் அதிகமாக ஸ்கோர் செய்வது என்பது இயலாத விஷயமாகும். லக்னோ அணியின் மார்க் வுட் மிக சிறப்பாக பந்து வீசினார். இதுவும் எங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

First published:

Tags: IPL, IPL 2023