முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி.யை வென்றது டெல்லி கேபிடல்ஸ்…

IPL 2023 : 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி.யை வென்றது டெல்லி கேபிடல்ஸ்…

டேவிட் வார்னர் – பிலிப் சால்ட்

டேவிட் வார்னர் – பிலிப் சால்ட்

ஓபனிங் பேட்ஸ்மேன் பிலிப் சால்ட் 6 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து  தொடக்க வீரர்களாக விராட் கோலியுடன் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 10.3 ஓவரில் அணி 82 ரன்கள் சேர்த்திருந்தபோது டூப்ளசிஸ் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடந்த சில போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் டெல்லியின் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிலிப் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மஹிபால் லோம்ரோர் 29 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்னும், அனுஜ் ராவத் 8 ரன்னும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 181 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

top videos

    இந்த போட்டியில் பெங்களூரு அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு நேர் மாற்றமாக முடிவு அமைந்தது. டெல்லி அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் வார்னர் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர், முதல் விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 22 ரன்னில் வார்னர் வெளியேற அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 26 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிலீ ரூசோ 22 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். ஓபனிங் பேட்ஸ்மேன் பிலிப் சால்ட் 6 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 16.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி அணி வெற்றி இலக்கை எட்டியது.

    First published:

    Tags: IPL, IPL 2023