முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ்

IPL 2023 : பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள்

அடுத்தடுத்து விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 48 பந்துகளில் 9 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 94 ரன்களை அதிரடியாக குவித்தார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் கிங்சை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களத்தில் இறங்கினர்.

இருவரும் அதிரடியாக ரன்களை குவித்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 31 பந்துகளை எதிர்கொண்ட டேவிட் வார்னர் 2 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரித்வி ஷா அரைச்சதம் கடந்து 38 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 54 ரன்கள் சேர்த்தார். அதிரடி ஆட்டத்தை இன்று வெளிப்படுத்திய ரிலீ ரூசோ 6 சிக்சர் மற்றும் 6 பவுண்டரியுடன் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் சால்ட் 26 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி அணி 213 ரன்கள் எடுத்தது.

top videos

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர். கேப்டன் ஷிகர் தவான் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த அதர்வா டெய்ட் 42 பந்துகளில் 55ரன்கள் எடுத்திருந்தபோது ரிட்டைர்ட் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 48 பந்துகளில் 9 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 94 ரன்களை அதிரடியாக குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 198 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    First published:

    Tags: IPL, IPL 2023