முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023: சேப்பாக்கத்தில் இன்று மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ..!

IPL 2023: சேப்பாக்கத்தில் இன்று மல்லுக்கட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ..!

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

CSK vs LSG : சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Chennai, India

நடப்பு ஐபிஎல்-லில் சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் இன்று மோதுகின்றன.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் கடந்த மார்ச் 31-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. குஜராத் அணியுடன் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் இன்றைய போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்கிறது.

இதனையொட்டி லக்னோ அணி வீரர்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்து பேருந்து மூலமாக விடுதிக்கு சென்றனர்.போட்டியையொட்டி சென்னை அணி வீரர்கள் ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

top videos

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் பகுதியில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    First published:

    Tags: CSK, IPL 2023, MS Dhoni, Tamil News