ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் போட்டியில், தோனி சிக்சர் அடித்த வீடியோ ஒன்று கவனம் பெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின்பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 200 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஆகியோர் விளையாடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 31 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். மொயின் அலி 10 ரன்களும், ஜடேஜா 12 ரன்களும் எடுத்தனர்.
Last over of the innings.@msdhoni on strike 💛, you know the rest 😎💥#TATAIPL | #CSKvPBKS pic.twitter.com/xedD3LggIp
— IndianPremierLeague (@IPL) April 30, 2023
கடைசி நேரத்தில் தோனி களத்தில் இறங்கினாலும், சாம் கரன் வீசிய 20 ஓவரின் கடைசி 2 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. டெவோன் கான்வே 1 சிக்சர் மற்றும் 16 பவுண்டரிகளை விளாசிய கான்வே 92 ரன்கள் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு காரணமாக இருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.