முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பஞ்சாப் அணியிடம் சி.எஸ்.கே. தோல்வியடைய இதுதான் காரணம்…. தோனி விளக்கம்

IPL 2023 : பஞ்சாப் அணியிடம் சி.எஸ்.கே. தோல்வியடைய இதுதான் காரணம்…. தோனி விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஏற்கனவே, சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் சென்னை அணியில் இல்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் தோனியும் தற்போது கருத்து கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாப் அணியுடனான தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி விளக்கம் அளித்துள்ளார். சூப்பர் த்ரில்லராக நேற்று நடந்த இந்த போட்டியில் பஞ்சாப் அணி கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் குவித்தது. டெவோன் கான்வே 92 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோர் உயர உதவினார்.

201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி பந்தில் பஞ்சாப் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சென்னை அணியின் பதிரனா வீசிய பந்தை, சிக்கந்தர் ராசா ஸ்கொயர் லெக் திசையில் அடிக்க 3 ரன்கள் ஓடி எடுக்கப்பட்டது. சென்னை அணி எப்படியும் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தோல்விக்கு பின்னர் சென்னை அணியின் கேப்டன் தோனி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

top videos

    பஞ்சாப் அணியின் பேட்டிங்கின்போது ஒரு சில ஓவர்களில் நாங்கள் அதிகமாக ரன்களை கொடுத்து விட்டோம். பந்து வீசும்போது எங்கு வீச வேண்டும் என்பது குறித்த தெளிவு பவுலர்களுக்கு இருக்க வேண்டும். ஏனென்றால், எதிரணி பேட்ஸ்மேன்கள் எப்போதுமே பெரிய ஷாட்டிற்காக காத்துக் கொண்டு இருப்பார்கள். மதீஷா பதிரனா மட்டும் சிறப்பாக பந்து வீசினார். மற்றபடி நாங்கள் வகுத்த திட்டங்கள் தவறானவையா அல்லது திட்டங்கள் சரியாக அமைந்து செயல்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தோனியின் இந்த பேட்டி சென்னை அணியின் பவுலர்கள் மீது அவர் அதிருப்தியுடன் இருப்பதை காட்டுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே, சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் சென்னை அணியில் இல்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் தோனியும் தற்போது கருத்து கூறியுள்ளார்.

    First published:

    Tags: IPL, IPL 2023