முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார் சென்னை அணியின் அம்பதி ராயுடு!

IPL 2023 : ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தார் சென்னை அணியின் அம்பதி ராயுடு!

அம்பதி ராயுடு

அம்பதி ராயுடு

இன்றைய ஆட்டத்தில் வெற்றியுடன் அம்பதி ராயுடு விடை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு ஓய்வை அறிவித்துள்ளார். இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார். இது தொடர்பான அறிவிப்பை அம்பதி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- மும்பை மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என 2 மிகச் சிறந்த அணிகளுக்காக நான் விளையாடியுள்ளேன். ஒட்டு மொத்தமாக 204 போட்டிகள், 14 சீசன்கள், 11 ப்ளே ஆஃப் மேட்ச்சுகள், 8 இறுதிப் போட்டி, 5 கோப்பைகளை கடந்து வந்துள்ளேன். இன்றைக்கு 6 ஆவது ஐபிஎல் கோப்பையை பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் இனிமையான பயணமாக அமைந்தது. இன்று இரவு நான் விளையாடும் போட்டி எனது கடைசி மேட்ச்சாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன். உண்மையிலேயே மிகப்பெரிய விளையாட்டுத் தொடரை மகிழ்ச்சியுடன் விளையாடியுள்ளேன். அனைவருக்கும் நன்றி. ஓய்வு பெறும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 2010 ஆம் ஆண்டு அம்பதி ராயுடு அறிமுகம் ஆனார். 2017 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் நீடித்த நிலையில், 2018 ஆம் ஆண்டு அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். மும்பை அணி 3 முறை கோப்பையை வென்ற போதும், சிஎஸ்கே 2 முறை கோப்பையை கைப்பற்றியபோது அம்பதி ராயுடு அணியில் இருந்தார். இன்றைய ஆட்டத்தில் வெற்றியுடன் அம்பதி ராயுடு விடை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

First published:

Tags: IPL, IPL 2023