முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்… டூப்ளசிஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே கடும் போட்டி

IPL 2023 : அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியல்… டூப்ளசிஸ் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே கடும் போட்டி

டூப்ளசிஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்

டூப்ளசிஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஃபாஃப் டூப்ளசிஸ்11 ஆட்டங்களில் 576 ரன்களை குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் பெங்களூரு அணியின் டூப்ளசிஸ் மற்றும் ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையிலான ரன் வித்தியாசம் ஒரேயொரு ரன்னாக மட்டும் உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை குவிக்கும் வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஆரஞ்ச் நிற தொப்பி வழங்கப்படும். இந்த தொப்பியை தற்போது வரை முடிந்த போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் என்ற அடிப்படையில், வெவ்வேறு அணி வீரர்கள் இதனை பெற்றுக் கொள்வார்கள்.

அந்த வகையில் தற்போது 11-12 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஃபாஃப் டூப்ளசிஸ்11 ஆட்டங்களில் 576 ரன்களை குவித்து ஆரஞ்ச் தொப்பியை தன் வசம் வைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 போட்டிகளில் விளையாடி 575 ரன்கள் குவித்து 2 ஆவது இடத்தில் இருக்கிறார். மும்பை அணியை சேர்ந்த சூர்ய குமார் யாதவ் 12 போட்டிகளில் விளையாடி 479 ரன்கள் குவித்து ‘3 ஆவது இடத்தில் உள்ளார்.

இதேபோன்று அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்களுக்கு பர்ப்பிள் நிற தொப்பி அளிக்கப்படுகிறது. இதனை குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த ரஷித் கான் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி பெற்றுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் அணியின் யுஸ்வேந்திர சாஹல் 21 விக்கெட்டுகளுடனும், 3 ஆவது இடத்தில் 19 விக்கெட்டுகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த பியூஷ் சாவ்லாவும், குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த முகமதி ஷமி 4 ஆவது இடத்திலும், சென்னை அணியின் துஷார் தேஷ் பாண்டே 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

First published:

Tags: IPL, IPL 2023