ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளார். சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் வெற்றி பெற்று, பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்தை பெறும் முனைப்பில் சென்னை அணியின் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
இன்றைய போட்டியில் சென்னை அணியில் விளையடும் வீரர்கள்- ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், மதீஷா பத்திரனா
ஐதராபாத் அணியில் விளையாடும் வீரர்கள்- ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக்
நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகள் மற்றும் + 0.265 நெட் ரன் ரேட்டுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதேபோன்று 5 போட்டிகளில் 2 இல் வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
சென்னையுடன் ஒப்பிடும்போது ஐதராபாத் அணி பலவீனமாக காணப்படுவதால், இன்றைய ஆட்டத்தில் அதிக விக்கெட் அல்லது ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று, கூடுதல் நெட்ரன்ரேட்டை பெறும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 8 புள்ளி மற்றும் +1.043 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 8 புள்ளி மற்றும +0.709 நெட் ரன்ரேட்டுடன் 2 ஆவது இடத்திலும் உள்ளன. இன்றை போட்டியில் அதிக ரன் அல்லது விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸை சென்னை அணி வென்றால் 2 அல்லது முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரையில் இங்கு விளையாடிய 23 போட்டிகளில் சென்னை அணி 19-இல் வெற்றி பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.