முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மும்பைக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பவுலிங்!!

IPL 2023 : மும்பைக்கு எதிரான மேட்ச்சில் சென்னை அணி பவுலிங்!!

ரோஹித் சர்மா - தோனி

ரோஹித் சர்மா - தோனி

ப்ளே ஆஃப் சுற்று நெருங்கி வரும் நிலையில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை அணி இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், மும்பை அணி 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இருந்த போதும், கடைசியாக ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தியது. எனவே, ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் மும்பை அணி உள்ளது. மேலும், சென்னை அணிக்கு எதிராக முந்தைய லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முனைப்பு காட்டி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இன்று மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆட்டம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

சென்னை அணியில் இன்று விளையாடும் வீரர்கள்- ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

மும்பை அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்

First published:

Tags: IPL, IPL 2023