முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்!!

IPL 2023 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்!!

தோனி - ஷிகர் தவான்

தோனி - ஷிகர் தவான்

  • Last Updated :
  • Tamil Nadu, India

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள சென்னை அணிக்கும், 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கும் இன்றைய போட்டி முக்கியம் என்பதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பஞ்சாப் அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவான் தோல் பட்டை காயத்தில் இருந்து மீண்டு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். பஞ்சாப் அணி தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த அணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் லக்னோவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அதர்வ தைடேவின் ஆட்டம் பஞ்சாப் அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. அந்த அணியில் முக்கிய வீரர்களாக திகழும் லிவிங்ஸ்டன், சிக்கந்தர் ராசா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்டோர் தங்களின் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளனர்.

சென்னை அணியை பொறுத்தவரை தொடர் தொடக்கத்தில் பந்துவீச்சில் சொதப்பி வந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தவறுகளை திருத்தி வருகிறது. சென்னை அணிக்கு தீபக் சாஹர் இல்லாத நிலையில், துஷார் தேஷ்பாண்டே 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், அதிக ரன்களை தாரை வார்ப்பது கவலை அளிக்கிறது. இளம் வீரர்களான ஆகாஷ் சிங் மற்றும் பத்திரனா சிறப்பான பந்துவீச்சை வீசினால் சென்னை அணி இன்று ஆதிக்கம் செலுத்தும்.

பேட்டிங்கை பொறுத்தவரை சென்னை அணி தற்போடு கூடுதல் பலம். ருதுராஜ் மற்றும் கான்வே ஜோடி தொடக்க வீரர்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ராயுடு இம்பாக்ட் வீரராக வந்தாலும் அதிரடி ரன் குவிக்கமல் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் அசத்தி வரும் சிவம் தூபே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து மிடில் ஆர்டரில் அசுர பலத்துடன் இருக்கிறார். மேலும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் மட்டுமே ஓராளவு தனது பங்களிப்பை அளித்து வருவது சென்னை அணிக்கு மற்றோரு சோதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா பவுண்டரிகள் அடிக்க திணறியதால் தோல்வியடைந்து என்று கூட கூறலாம்.

சென்னை அணியில் இன்று விளையாடும் வீரர்கள்- ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா

பஞ்சாப் அணி வீரர்கள் - அதர்வா டைடே, ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராசா, சாம் குர்ரன், ஜிதேஷ் சர்மா(வ), ஷாருக் கான், ஹர்பிரீத் சிங் பாட்டியா, ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

top videos
    First published:

    Tags: IPL, IPL 2023