ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடும். இதனால் இந்த போட்டி சென்னை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
கொல்கத்தா அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா, வருண் சக்கரவர்த்தி.
ஒவ்வொரு அணிகளுக்கும் குறைந்தது தலா 2 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், ப்ளே ஆஃபில் 4 ஆவது இடத்தில் இருக்கும் அணி 16 புள்ளிகளைப் பெற்றிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இன்று சென்னையுடன் மோதும் கொல்கத்தா அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ள நிலையில், அந்த அணி 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கொல்கத்தா ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ள நிலையில், இன்றைய போட்டியில் தோல்வியடைந்து சென்னைக்கு வழி விடுமா அல்லது வெற்றி பெற்று சி.எஸ்.கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்குமா என்பது இன்றிரவுக்குள் தெரிந்து விடும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.