முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : டெல்லி அணிக்கு எதிரான மேட்ச்சில் சி.எஸ்.கே. பேட்டிங்!!

IPL 2023 : டெல்லி அணிக்கு எதிரான மேட்ச்சில் சி.எஸ்.கே. பேட்டிங்!!

தோனி - டேவிட் வார்னர்

தோனி - டேவிட் வார்னர்

ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் சென்னை அணி 2 ஆவது இடத்திலும், டெல்லி அணி 10 ஆவது இடத்திலும் உள்ளன

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் பாயின்ட்ஸ் டேபிளில் சென்னை அணி 2 ஆவது இடத்திலும், டெல்லி அணி 10 ஆவது இடத்திலும் உள்ளன. ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு குறைந்த வரும் நிலையில், இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியோடு டெல்லி அணி களம் காண்கிறது. சென்னை அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில் இன்றைய போட்டியை எந்த வித நெருக்கடியும் இல்லாமல் சென்னை அணி எதிர்கொள்கிறது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. நெட் ரன் ரேட்டும் மிக குறைவாக இருப்பதால் இனி வரும் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். மிக மெதுவாக விளையாடுகிறார் என்கிற குற்றச்சாட்டு டேவிட வார்னர் மீது உள்ளது. அணியில் அவரை தவிர்த்து மிட்செல் மார்ஷ், ரிலீ ரூசோ ஆகியோர் ஓரளவு விளையாடி வருகின்றனர்.

சென்னை அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

top videos

    டெல்லி அணியில் இன்று விளையாடும் வீரர்கள் - டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரூசோ, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா

    First published:

    Tags: IPL, IPL 2023