ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் அதன் வெற்றிக் கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோக்களை ஐபிஎல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. லீக் சுற்றில் 17 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தை பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்றிருந்தது. நேற்று நடந்த குவாலிபையர் 1 போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியால் 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
Emotions in plenty 🤗
Moments of elation, pure joy and the feeling of making it to the Final of #TATAIPL 2023 💛
Watch it all here 🎥🔽 #GTvCSK | #Qualifier1 | @ChennaiIPL pic.twitter.com/4PLogH7fCg
— IndianPremierLeague (@IPL) May 24, 2023
He went viral when he gave "Thala" a grand welcome through his DJ console 👌
We got behind the scenes to find out more about DJ Zen - the man who has got Chepauk grooving to his tunes 💃🏻 🕺🏻 #TATAIPL | #GTvCSK | #Qualifier1 pic.twitter.com/0B15oN6ZiN
— IndianPremierLeague (@IPL) May 24, 2023
Consistent run with the bat 👌🏻
Powerplay wickets 😎
Mini-Battle for the best catch 😃
Final Calling: On the mic with @deepak_chahar9 & @Ruutu1331 post #CSK's win in #Qualifier1 👌🏻👌🏻 - By @28anand
Full Interview 🎥🔽 #TATAIPL | #GTvCSKhttps://t.co/P2QzyUwuvr pic.twitter.com/zePCIekzRO
— IndianPremierLeague (@IPL) May 24, 2023
ஐபிஎல் தொடரில் 10 ஆவது முறையாக சென்னை அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இது எந்தவொரு அணியும் ஏற்படுத்தாத சாதனையாகும். இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றிக் கொண்டாட்ட வீடியோக்களை ஐபிஎல் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இவற்றுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.