முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘தோனி’ கேங்ஸ்டர் இல்ல.. ஒத்தையா வர மான்ஸ்டர் - கொண்டாடும் ரசிகர்கள்

‘தோனி’ கேங்ஸ்டர் இல்ல.. ஒத்தையா வர மான்ஸ்டர் - கொண்டாடும் ரசிகர்கள்

தோனி

தோனி

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையா தோனி மீண்டெழுவது ரசிகர்களுக்கு நம்பிக்கை விதைத்தது.

  • Last Updated :
  • Chennai, India

தோனி கிரிக்கெட்டின் மாயாவி.. க்ரவுண்ட் வந்தா போதும் பாஸ்.. மேட்ச் வின் பண்றது எல்லாம் ஒரு மேட்டரா ஒரு சிக்ஸ் அடிச்சா போதும் அப்படியே பாத்துட்டு போய்விடுவேன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனியின் கதை சொல்லட்டா சார்..

கிரிக்கெட் கடவுள் சச்சின், பிரின்ஸ் கங்குலி, இந்தியாவின் சுவர் டிராவிட், அதிரடி மன்னன் சேவாக் இன்னும் பல ஜாம்பவான்கள் கிரிக்கெட்டில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில்  இந்திய கிரிக்கெட் அணியில் அடியெடித்து வைத்தவர்தான் தோனி.பெஸ்ட் ஃபினிஷர் , கேப்டன் கூல் என கொண்டாடும் ரசிகர்கள் தோனியின் முதல் போட்டியில் கண்டிப்பாக வசைப்பாடியிருப்பார்கள். காரணம் சர்வதேச கிரிக்கெட்டில் டக் அவுட்டில் தனது இன்னிங்ஸை தொடங்கினார்.

தோனி

பிரேக் தி ரூல்.. கிரிக்கெட் ரூல் புக்கில் இருந்த ஸ்ட்ரைட் ட்ரைவ்.. கவர் ட்ரைவ்.. ஸ்கொயர் கட் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்க. கழுத்தளவு ஹேர்ஸ்டைல்.. காட்டடி.. ஹெலிகாப்டர் ஷாட் என ரசிகர்களின் கவனத்தை மெல்ல ஈர்த்தார் தோனி. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷராப் தோனியின் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர் என்றால் பார்த்துக்கோங்க.

90-களில் சச்சின் அவுட்டானால் மேட்ச் காலி என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிடுவார்கள். டிவியை தூக்கி போட்டு உடைத்த சம்பவங்கள் எல்லாம் இருக்கு. சச்சினால் வாங்க முடியாத உலகக்கோப்பையை சச்சினுக்காக வாங்கி கொடுத்தவர் தோனி. கங்குலி லார்ட்சில் சட்டையை கழற்றி சுற்றியது பலருக்கு நினைவிருக்கும் அந்தப்போட்டியை முகமது கைப், யுவராஜ் வென்று கொடுத்திருப்பார்கள். சச்சின் அவுட்டானது மேட்ச் அவ்ளோதான் என முகமது கைஃப் குடும்பமே டிவி-யை ஆஃப் செய்துவிட்டு படம் பார்க்க தியேட்டர் சென்றுவிட்டார்கள். படம் முடிஞ்சு வந்துதான் கைஃப் அடிச்சுதான் மேட்ச் வின் பண்ணுனதே தெரியுமாம்.

Also Read:  சிஎஸ்கே-வில் ரஹானே.. தோனி என்ன லாஜிக் இது - சேவாக் விளாசல்

2011 உலகக்கோப்பை ஃபைனலில் கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் அவுட்டான போது இந்த முறை யாரும் டிவி-யை ஆஃப் செய்யவில்லை. தோனியின் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தனர். தோனி தன்னுடைய ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் விளாசி உலகக்கோப்பை வென்றார். அப்போது“Dhoni finishes off in style.India lift the World Cup after 28 years!” என்ற ரவி சாஸ்திரி கமெண்டரியை இன்றளவும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

2011 உலகக்கோப்பை ஃபைனல்

இளம்படையுடன் சென்று டி20 கோப்பையை வென்ற தோனி. அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சீனியர் ப்ளேயர்களை கழற்றிவிடவும் தயங்கவில்லை. அவரது ஆட்டம் போலவே கிரிக்கெட்டில் அவரின் நடவடிக்கைகளும் அதிரடியாக இருந்தது. யானைக்கு அடி சறுக்கும் என்பார்கள் தோனிக்கு சறுக்கியது உண்டு. தோல்வியை கண்டு துவண்டது இல்லை. சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையா தோனி மீண்டெழுவது ரசிகர்களுக்கு நம்பிக்கை விதைத்தது.

Also Read: “நாயகன் மீண்டும் வர..!” 2 சிக்ஸர்.. 5000 ரன்கள் - மாஸ் காட்டிய தோனி

அதற்கு ஒரு உதாரணம் சூதாட்டம் புகார் காரணமாக சிஎஸ்கே இரண்டு வரும் தடை. 2 சீசன்களை மிஸ் செய்த சிஸ்கே 2018 களமிறங்கிய போது அங்கிள்ஸ் ஆர்மி என கலாய்த்து தள்ளினர். விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிக்காமல் கோப்பையை வென்று தனது ஸ்டைலில் பதிலளித்தார் தோனி. இந்தியாவில் எந்த க்ரவுண்ட் போனாலும் தோனிக்கான மாஸ் குறையாது. கிரிக்கெட்டில் இருந்து ரிட்டயர்ட் ஆகிட்டார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இல்லை. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஐபிஎல்லில் தலைக்காட்டும் தோனிக்காக காத்துக்கிடக்கின்றனர் ரசிகர்கள்.

தோனி

top videos

    சேப்பாக்கத்தில் லக்னோவுக்கு எதிராக தோனி அடித்த 2வது சிக்ஸர் போய் கொஞ்சம் பார்த்தா தோனிக்கான மாஸ் தெரியும். நேற்று சிஎஸ்கே-வுக்காக தோனி கேப்டனாக பங்கேற்ற 200-வது போட்டி. சிஎஸ்கே கேப்டனாக நான் விளையாடும் 200-வது ஐபிஎல் போட்டி இது என்பது எனக்கு தெரியாது. 199வது போட்டிக்கும் 200-வது போட்டிக்கும் பெரிய வித்தியாசம் என்ன உள்ளது. போட்டிகளை எப்படி அனுபவித்து விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம் என கூலாக பதில் சொன்னார்.மேட்ச் தோற்றாலும் ரசிகர்கள் அந்த ரிசல்ட் பத்தி கவலைப்பட்டதா தெரியல. தலைவன் அடிச்ச 2 சிக்ஸே போதும் சார் என்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் தோனி கேங்க கூட்டிக்கிட்டு வர கேங்ஸ்டர் இல்ல ஒத்தையா வரும் மான்ஸ்டர்..

    First published:

    Tags: CSK, IPL 2023, MS Dhoni, Tamil News