முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : சன் ரைசர்ஸுடன் சி.எஸ்.கே. இன்று மோதல்… அணியில் இடம்பெறுவாரா பென் ஸ்டோக்ஸ்

IPL 2023 : சன் ரைசர்ஸுடன் சி.எஸ்.கே. இன்று மோதல்… அணியில் இடம்பெறுவாரா பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ்

நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகள் மற்றும் + 0.265 நெட் ரன் ரேட்டுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மோதுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பி ரசிகர்கள் உள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரையில் இங்கு விளையாடிய 23 போட்டிகளில் சென்னை அணி 19-இல் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு சீசனில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகள் மற்றும் + 0.265 நெட் ரன் ரேட்டுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதேபோன்று 5 போட்டிகளில் 2 இல் வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது. சென்னையுடன் ஒப்பிடும்போது ஐதராபாத் அணி பலவீனமாக காணப்படுவதால், இன்றைய ஆட்டத்தில் அதிக விக்கெட் அல்லது ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று, கூடுதல் நெட்ரன்ரேட்டை பெறும் என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே அணியின் முக்கிய ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

top videos

    தற்போது பென் ஸ்டோக்ஸ் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது அணியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்து. இருப்பினும் ஆடும் லெவெனில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்க வீரர்கள் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அணிக்கு அற்புதமான தொடக்கத்தை அளித்து வருகின்றனர். அஜிங்யா ரஹானே, ஆல் ரவுண்டர் ஷிவம் துபே பேட்டிங் வரிசையில் பலம் சேர்க்க, மிடில் ஆர்டரில் அம்பதி ராயுடு, ரவிந்திரா ஜடேஜா ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் மொயின் அலி, கேப்டன் தோனி ஆகியோரும் அதிரடி காட்டினால் அணி நல்ல ஸ்கோரை பெறும். பந்துவீச்சில் மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் சென்னை அணியில் ருதுராஜ் கெய்கவாட், டெவோன் கான்வே, அஜிங்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவிந்திர ஜடேஜா, தோனி, மதீஷா பதிரனா, மகேஷ் தீக்சனா, துஷார் தேஷ் பாண்டே ஆகியோர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: IPL, IPL 2023