முகப்பு /செய்தி /விளையாட்டு / வரலாறு படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… கடந்து வந்த பாதை இதோ…

வரலாறு படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… கடந்து வந்த பாதை இதோ…

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ள சென்னை அணி, மீண்டும் மகுடம் சூடுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது...

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை கடந்துவந்த பாதையைப் பார்க்கலாம். 2008-ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட்டில் கடும் போட்டிக்கு இடையே தோனியை, சென்னை அணி ஒப்பந்தம் செய்தது. முதல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை அணி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து இரண்டாவது இடமே பிடித்தது

இதையடுத்து, வலுவான அணியை கட்டமைத்து 2010-ல் முதல் முறையாக ஐபிஎல் மகுடம் சூடியது சி.எஸ்.கே.... தொடர்ந்து ஆதிக்கத்தை நிலைநாட்டிய சிஎஸ்கே, 2011-ல் நடைபெற்ற தொடரிலும் கோப்பையை தக்க வைத்தது. மேலும், 2012, 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடம் பிடித்தது. அதன்பின்னர், சூதாட்ட புகாரில் சிக்கி இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் சென்னை அணி மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.

இதையும் படிங்க - ‘பேட்டிங் ஆர்டரில் தவறு செய்த ஹர்திக் பாண்ட்யா’ – குஜராத் அணியின் தோல்விக்கான காரணம் சொல்லும் இர்பான் பதான்…

top videos

    ஆனால், இரண்டு ஆண்டு தடைக்குப் பின்னர் மீண்டுவந்த தோனி அண்ட் கோ, 2018-ல் மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வியக்க வைத்தது. 2019-ல் இரண்டாம் இடம் பிடித்த நிலையில், 2021-ல் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது. நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ள சென்னை அணி, மீண்டும் மகுடம் சூடுமா?  என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது...

    First published:

    Tags: IPL, IPL 2023