முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

IPL 2023 : லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சி.எஸ்.கே.

சென்னை அணி

சென்னை அணி

லக்னோ அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஏற்படுத்தித் தந்த சிறப்பான தொடக்கத்தை பின்னர் வந்தவர்கள் பயன்படுத்த தவறினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் டாஸில் வெற்றி பெற்ற லக்னோ அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்களாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். கடந்த போட்டியை விட இந்த மேட்ச்சில் சென்னை அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வேயின் சிறப்பான பார்ட்னர்ஷிப்பால் 7 ஓவரில் அணி 86 ரன்களை எடுத்திருந்தது.

31 பந்துகளை எதிர்கொண்ட கெய்கவாட் 4 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 57 ரன்களை எடுத்தார். கான்வே 29 பந்தில் 47 ரன்களும், அடுத்து வந்த ஷிவம் துபே 16 பந்தில் 27 ரன்னும் எடுத்தனர். ரவிந்திர ஜடேஜா 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தான் எதிர்கொண்ட முதல் 2 பந்தில் சிக்சர் அடித்த தோனி 3 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.

top videos

    20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் விsளயைாடத் தொடங்கினர். கேப்டன் கே.எல். ராகுல் 20 ரன்னில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 22 பந்தில் 53 ரன்கள் குவித்து வெளியேறினார். தீபக் ஹூடா 2 ரன்னிலும், க்ருணல் பாண்ட்யா 9 ரன்னிலும் அவுட்டாகினர். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 21 ரன்களும், நிகோலஸ் பூரன் 32 ரன்களும் சேர்த்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணியால் 205 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    First published:

    Tags: IPL, IPL 2023