முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : டெல்லியை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சி.எஸ்.கே.!!

IPL 2023 : டெல்லியை வென்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சி.எஸ்.கே.!!

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 17 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். வழக்கம்போல இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இருவரும் முதல் விக்கெட்டிற்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 50 பந்துகளை எதிர்கொண்ட ருதுராஜ் 7 சிக்சர் 3 பவுண்டரியுடன் 79 ரன்கள் குவித்தார். 52 பந்துகளை எதிர்கொண்ட கான்வே 3 சிக்சர் 11 பவுண்டரியுடன் 87 ரன்கள் எடுக்க அடுத்து வந்த ஷிவம் துபே 3 சிக்சருடன் 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக விளையாடிய ஜடேஜா 7 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 20 ரன்களும், தோனி 5 ரன்களும் எடுக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 223 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடத் தொடங்கினர்.

top videos

    தொடக்க வீரர் பிரித்வி ஷா 5 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பிலிப் சால்ட் 3 ரன்னும், ரிலீ ரூசோ ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். யஷ் துலி 13 ரன்களும், அக்சர் படேல் 15 ரன்களும் சேர்த்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் கேப்டன் டேவிட் வார்னர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தார். 58 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 86 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களில் அமான் ஹகிம் 7 ரன்களும், லலித் யாதவ் 6 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 17 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023