முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

IPL 2023 : டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை அணி வீரர்கள்

சென்னை அணி வீரர்கள்

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே, இந்த போட்டியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில் 24 ரன்களும், அடுத்து வந்த அஜிங்யா ரஹானே 20 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். ரன் வேகம் மந்தமாக இருந்த நிலையில் ஷிவம் துபே 3 சிக்சர்களை விளாசி ரன் குவிப்பை வேகப்படுத்தினார்.

12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து துபே ஆட்டமிழக்க அம்பதி ராயுடு 23 ரன்கள் சேர்த்தார். 7 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த  கேப்டன் தோனியும், ரவிந்திரா ஜடோவும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கலீல் அகமது வீசிய ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டார் தோனி. 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஜடேஜாவும், 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து தோனியும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

top videos

    கேப்டன் டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட் 17 ரன்னும், மிட்செல் மார்ஷ் 5 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதன்பின்னர் டெல்லி அணியின் ரன் குவிப்பு ஆமை வேகத்தில் நகரத் தொடங்கியது. மனிஷ் பாண்டே 29 பந்தில் 27 ரன்னும், ரிலீ ரூசோ 37 பந்துகளில் 35ரன்னும் எடுத்தனர். கடைசி நேரத்தில் அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணியால் 140 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    First published:

    Tags: IPL, IPL 2023